/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மார்ச் 14, 15ல் கச்சத்தீவு திருவிழா: பயண கட்டணம் ரூ.2000
/
மார்ச் 14, 15ல் கச்சத்தீவு திருவிழா: பயண கட்டணம் ரூ.2000
மார்ச் 14, 15ல் கச்சத்தீவு திருவிழா: பயண கட்டணம் ரூ.2000
மார்ச் 14, 15ல் கச்சத்தீவு திருவிழா: பயண கட்டணம் ரூ.2000
ADDED : ஜன 31, 2025 02:29 AM
ராமநாதபுரம்:இலங்கை கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் சர்ச்சில் மார்ச் 14, 15ல் திருவிழா நடக்கிறது. இவ்விழாவிற்கு படகில் சென்று வருவதற்கு ரூ.2000 கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
இத்திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்க யாழ்ப்பாணம் பிஷப் ஜோசப் ஜெபரத்தினம் அழைப்பு விடுத்துள்ளார். மார்ச் 14ல் கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் முன் விழாக்கொடி ஏற்றப்பட்டு மார்ச் 15ல் திருவிழா சிறப்பு திருப்பலி பூஜை நடக்கிறது.
இதில் இந்திய பக்தர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சி தொடர்பாக நேற்று ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை ராமேஸ்வரம் செயின்ட் ஜோசப் சர்ச் பாதிரியார் அசோக்வினோ மற்றும் மீனவப்பிரதிநிதிகள் சந்தித்தனர்.
பக்தர்களுக்கு பந்தல் வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகளை அதிகரிக்க இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.
பாதிரியார் அசோக்வினோ கூறுகையில், ''கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் விழாவிற்கு சென்று வர ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்துதர கேட்டுள்ளோம். பிப்.,15ல் விண்ணப்பங்கள் வழங்கி 25க்குள் பெறப்படும். 75 விசைப்படகுகள், 16 நாட்டுப்படகுகளில் 2500 முதல் 3000 பேர் வரை செல்ல உள்ளனர். நபருக்கு ரூ.2000 கட்டணம் செலுத்த வேண்டும். 5 முதல் 70 வயதுள்ளவர்கள் பங்கேற்கலாம். பாதுகாப்பு கருதி விலை உயர்ந்த பொருட்கள் கொண்டுவர வேண்டாம். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது,'' என்றார்.