/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில போட்டியில் வெற்றி பெற்ற கவினா சி.பி.எஸ்.இ., மாணவர்கள்
/
மாநில போட்டியில் வெற்றி பெற்ற கவினா சி.பி.எஸ்.இ., மாணவர்கள்
மாநில போட்டியில் வெற்றி பெற்ற கவினா சி.பி.எஸ்.இ., மாணவர்கள்
மாநில போட்டியில் வெற்றி பெற்ற கவினா சி.பி.எஸ்.இ., மாணவர்கள்
ADDED : ஆக 11, 2025 10:05 PM

முதுகுளத்துார், : மாநில அளவிலான வடிவமைப்பு போட்டியில் கவினா சி.பி.எஸ்.இ., பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 3ம் இடம் பெற்றனர்.
மதுரையில் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான வடிவமைப்பு போட்டி நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் முதுகுளத்துார் அருகே கவினா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்தனர்.
மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் இடம் பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த கவினா பள்ளியின் மாணவர்கள் கோபிகா, ஹர்சிகா, தங்க தமிழ்ச்செல்வி, யாசவினி மற்றும் மாஸ்டர் பாரதிராஜா ஆகியோரை பள்ளியின் தலைவர் கண்ணதாசன் பாண்டியன், தாளாளர் ஹேமலதா உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.