ADDED : ஆக 21, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது.
பரமக்குடி ஆர்.எஸ்.வாலிபால் கழகம் மற்றும் பரமக்குடி ஒற்றை சிறகுகள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் வாலிபால் போட்டி நடந்தது.
இதில் கீழக்கரை முகமது சதக் இன்ஜினி யரிங் கல்லுாரி சாம்பியன் பட்டம் பெற்று ரொக்கப் பரிசு ரூ.10 ஆயிரம் வென்று கல்லுாரிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர் நிர்மல் கண்ணன், துணை முதல்வர் செந்தில்குமார், உடற்கல்வி இயக்குநர்கள் சுரேஷ்குமார், வில்வ சத்யா உள்ளிட்ட பேரா சிரியர்கள் பாராட்டினர்.