ADDED : ஏப் 07, 2026 04:52 PM

கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் 26வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா தலைமை வகித்தார். துணை முதல்வர் பெரோஸ் கான் வரவேற்றார். முதல்வர் ராஜசேகர் ஆண்டறிக்கை வாசித்தார். பட்டிமன்ற பேச்சாளர் சிவகுருநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
நடப்பு கல்வியாண்டில் விளையாட்டு மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வளாக தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 156 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. உடற்கல்வி இயக்குனர் தவசிலிங்கம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சுரேஷ், மலர், விக்னேஷ் குமார், மரகதம், சசிரேகா, நுாலகர் பால்ராஜ் உட்பட துறைத் தலைவர்கள் செய்திருந்தனர்.
---
