/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழத்துாவல் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் வசதி இல்லாமல் சிரமம்; வீட்டை காலி செய்யும் நிலை
/
கீழத்துாவல் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் வசதி இல்லாமல் சிரமம்; வீட்டை காலி செய்யும் நிலை
கீழத்துாவல் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் வசதி இல்லாமல் சிரமம்; வீட்டை காலி செய்யும் நிலை
கீழத்துாவல் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் வசதி இல்லாமல் சிரமம்; வீட்டை காலி செய்யும் நிலை
ADDED : ஜூலை 10, 2025 10:50 PM
முதுகுளத்துார்; முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் கிராமத்தில் போலீஸ் குடியிருப்பில் அத்தியாவசிய தேவைக்கும் குடிப்பதற்கும் தண்ணீர் வசதியின்றி சிரமப்படுவதால் பல குடும்பங்கள் வீட்டை காலி செய்து வாடகை வீட்டிற்கு செல்லும் அவலநிலை உள்ளது.
முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் தங்குவதற்கு வசதியாக போலீஸ் குடியிருப்புகள் கட்டப்பட்டது. இங்கு பணிபுரியும் போலீசார் குடும்பத்துடன் தங்கி வந்தனர்.
கடந்த சில மாதங்களாக முறையாக காவிரி குடிநீர் வரவில்லை. அவசர நேரத்தில் பொருட்கள் வாங்குவதற்கு கூட 10 கி.மீ., செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வேறு வழியின்றி இங்கு பணிபுரியும் போலீசார் முதுகுளத்துார், பரமக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிபுரிகின்றனர்.
தற்போது சில குடும்பங்கள் மட்டுமே போலீஸ் குடியிருப்பில் வசிக்கின்றனர். கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாகவே காவிரி குடிநீர் வராதால் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அத்தியாவசிய தேவைக்கும் தண்ணீர் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட போர்வெல்லும் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடியிருப்பு அருகே சீமைக்கருவேல் மரங்கள் வளர்ந்து புதர்மண்டி இருப்பதால் விஷப்பூச்சிகள் தங்கும் கூடாரமாக உள்ளது.
செப்., அக்., மாதத்தில் குருபூஜை விழா நடைபெறும் போது வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வந்து தங்குவது வழக்கம். இந்நிலையில் போதுமான குடிநீர் மற்றும் அடிப்படை வசதி இல்லாததால் தங்க வைப்பதற்கு சிரமம் ஏற்படும். எனவே கீழத்துாவல் போலீஸ் குடியிருப்பில் அத்தியாவசிய தேவைக்கும், குடிப்பதற்கும் போதுமான தண்ணீர் வசதி ஏற்படுத்தவும், கருவேல் மரங்களை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.