ADDED : டிச 25, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: கேரளா திருச்சூரில் இருந்து டிச.23 மாலை 4:00 மணிக்கு ராமேஸ்வரம் நோக்கி காரில் மூன்று பேர் வந்தனர். இதே போல் நயினார் கோவில் அருகே மும்முடிச்சாத்தான் பகுதியில் இருந்து வாழைத்தார் ஏற்றிய சரக்கு வாகனம் வந்தது.
ராமநாதபுரம்-மதுரை இருவழிச்சாலையில் பொட்டி தட்டி விலக்கு ரோட்டில் நேருக்கு நேர் மோதியதில் கார் உருக்குலைந்தது. இதில் கேரள கார் டிரைவர் வினோத் கிருஷ்ணன் 32, பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று காலை பலியானார். பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.