/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் கேரள அன்னாசிபழம் விற்பனை
/
ராமநாதபுரத்தில் கேரள அன்னாசிபழம் விற்பனை
ADDED : மே 21, 2025 11:58 PM

ராமநாதபுரம்: கோடைகாலத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் கேரள அன்னாசிபழங்களை மதுரை, புதுகோட்டை ஆகிய இடங்களில் இருந்து வாங்கிவந்து கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பழங்கள், காய்கறிகள் சாகுபடிகுறைந்த அளவில் தான் நடக்கிறது. இதனால்வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து பழங்கள் ராமநாதபுரம் சந்தைக்குவிற்பனைக்கு வருகின்றன. தற்போது கேரள மாநிலத்திருந்து அன்னாசிபழங்கள் அதிகளவில் மதுரை, புதுக்கோட்டை மாவட்டத்திற்குவருகிறது.
அங்கிருந்து வாங்கி வந்து ராமநாதபுரத்தில் கிலோ ரூ.40 முதல்ரூ.50 வரையும்விற்கின்றனர். சில்லறை விலையில் சிறிய பழம் ரூ.20க்கும்,பெரியது ரூ.30க்கு விற்கப்படுகிறது. கோடை காலம் என்பதால் மக்கள்பழங்களை விரும்பி வாங்குகின்றனர். அன்னாசிபழம் விற்பனையும்ஜோராக நடப்பதாக வியாபாரிகள் கூறினர்.---