/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காதல் திருமணம் செய்த கேரள இளம் பெண் கோர்ட்டில் ஆஜர்
/
காதல் திருமணம் செய்த கேரள இளம் பெண் கோர்ட்டில் ஆஜர்
காதல் திருமணம் செய்த கேரள இளம் பெண் கோர்ட்டில் ஆஜர்
காதல் திருமணம் செய்த கேரள இளம் பெண் கோர்ட்டில் ஆஜர்
ADDED : பிப் 06, 2025 02:40 AM
கமுதி:காதல் திருமணம் செய்த கேரள பெண்ணை கமுதி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கண்ணார்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் 26. கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அதே நிறுவனத்தில் கேரளாவை சேர்ந்த சக்தி 20, வேலை செய்தார். இருவரும் கோவையில் டிசம்பரில் பதிவு திருமணம் செய்தனர்.
இந்நிலையில் சக்தியை காணவில்லை என அவரது தந்தை குணசேகரன் கேரளா வடக்கஞ்சேரி போலீசில் புகார் அளித்தார்.
கேரள தனிப்படை போலீசார் கமுதியில் தங்கி இருந்த சக்தியை கேரளாவிற்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.
சக்தி தனது கணவருடன் கமுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் 18 வயது பூர்த்தியானபின் நடந்த பதிவு திருமணம் என்பதால் பெண்ணை கேரள போலீசாருடன் அனுப்ப உள்ளூர் போலீசார் மறுத்து விட்டனர்.
இதையடுத்து கமுதி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பாலமுருகன், சக்தியை ஆஜர்படுத்தினர். கேரள நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நீதிபதி சங்கீதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தினார். பாலமுருகனுடன் வாழ விரும்புவதாக சக்தி கூறியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.