/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் கானல் நீராகும் மண்ணெண்ணெய் விநியோகம்; கார்டுதாரர்கள் ஏமாற்றம்
/
சாயல்குடியில் கானல் நீராகும் மண்ணெண்ணெய் விநியோகம்; கார்டுதாரர்கள் ஏமாற்றம்
சாயல்குடியில் கானல் நீராகும் மண்ணெண்ணெய் விநியோகம்; கார்டுதாரர்கள் ஏமாற்றம்
சாயல்குடியில் கானல் நீராகும் மண்ணெண்ணெய் விநியோகம்; கார்டுதாரர்கள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 24, 2025 10:24 PM
கடலாடி; சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படாததால் ரேஷன் கார்டுதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சாயல்குடியில் ராம்கோ கூட்டுறவு சார்பில் இரண்டு ரேஷன் கடைகளும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் இயங்கக்கூடிய மூன்று ரேஷன் கடைகளும் உள்ளன. சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் ரேஷன் கடைகளில் மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் ரேஷன் கார்டுகளின் மூலமாக மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யாததால் பனைத் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட ஏழை, நடுத்தர குடும்பத்தினர் சிரமத்தை சந்திக்கின்றனர்.ரேஷன் கார்டுதாரர்கள் கூறியதாவது:
சாயல்குடி ரேஷன் கடைகளுக்கு ஒரு கடைக்கு 250லி., வீதம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மண்ணெண்ணெய் டின் வருகிறது.
ஒரு சிலர் மொத்தமாக மண்ணெண்ணெய் வாங்கி வெளி மார்க்கெட்டில் கூடுதலாக ஒரு லி., ரூ.70க்கு விற்பனை செய்யும் போக்கு தொடர்கிறது.
குறிப்பாக பனை மரத் தொழிலாளர்கள் வெளி இடங்களில் குடிசை கட்டி தங்கும் போது மண்ணெண்ணெய் விளக்கு உள்ளிட்டவை முக்கிய தேவையாக உள்ளது. எனவே கடலாடி வட்டார வழங்கல் அலுவலர், மண்ணெண்ணெய் விற்பனையை ஆய்வு செய்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.