ADDED : மார் 18, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யு.கே.ஜி., மழலையர்களுக்கான 33வது பட்டமளிப்பு விழா நடந்தது.
பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். மழலைகளுக்கு பட்டங்களை வழங்கினார். பள்ளி செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆடிட்டர் தினகரன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஷோபனா தேவி வரவேற்றார்.
லயன்ஸ் முன்னாள் கவர்னர் ஜெகநாதன், லயன்ஸ் சங்க தலைவர் ஜெகநாதன், செயலாளர் பாஸ்கர பாண்டியன், பொருளாளர் ரங்கநாதன் வாழ்த்தினர்.
ஆசிரியை உஷா ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர்கள், பெற்றோர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

