UPDATED : நவ 06, 2026 07:15 PM
ADDED : நவ 05, 2026 07:19 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் அறிவுத்தலின் படி, அந்நிலையத்தில் பிரதமர் கிசான் சம்மான், விளை நிலங்கள் காப்போம் இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொ) வாசுகி தலைமை வகித்தார். இதில், குஜராத் மாநிலம் பான்ஸ்கந்தாவில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் 24வது தவணை வழங்கும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
மாநில வேளாண் திட்ட பிரிவு மாவட்ட துணை இயக்குநர் அமர்லால், விவசாய நலனுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பேசினார். அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் விஜயகுமார், கண்ணையன், விவசாயிகள் பங்கேற்றனர்.–
