நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே மேலமடை கிராமத்தில் 51வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. பாமா, ருக்மணி சமேத கண்ணபிரானுக்கு அபிஷேக அலங்காரத்தில் பூஜை நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. கண்ணணாக தேர்வு செய்யப்பட்ட மதன் கோயிலில் இருந்து பக்தர்களுடன் கிராம வீதிகளில் வலம் வந்து உறியடித்தார்.
மஞ்சள் நீராட்டு மற்றும் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.