தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கிருஷ்ண ஜெயந்தி ஊஞ்சல் உற்ஸவம்

 கிருஷ்ண ஜெயந்தி ஊஞ்சல் உற்ஸவம்

 கிருஷ்ண ஜெயந்தி ஊஞ்சல் உற்ஸவம்


ADDED : செப் 27, 2026 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 02:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மகாபிரபு பைடெக் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி ராதா, கிருஷ்ணர் ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது.

ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் அருகே மகாபிரபு பைடெக் கோயில் உள்ளது.

இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் ராதா, கிருஷ்ணன் எழுந்தருளியதும் உற்ஸவ விழா நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பகவத் கீதை போதனை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பின் ஹரே கிருஷ்ணா சத்சங்க மையம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட ஹரே கிருஷ்ணா சத்சங்க மையத் தலைவர் சகஸ்ரநாமதாசன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us