ADDED : செப் 03, 2026 03:21 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி முருகன், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் கோயில் முருகன் சன்னதிகளில் ஆவணி கிருத்திகையை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.
முருகன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். ஏராளமான பக்தர்கள் முருகன் பக்தி பாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
