/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தவறவிட்ட நகையை ஒப்படைத்தஆட்டோ டிரைவருக்கு பாராட்டு
/
தவறவிட்ட நகையை ஒப்படைத்தஆட்டோ டிரைவருக்கு பாராட்டு
தவறவிட்ட நகையை ஒப்படைத்தஆட்டோ டிரைவருக்கு பாராட்டு
தவறவிட்ட நகையை ஒப்படைத்தஆட்டோ டிரைவருக்கு பாராட்டு
ADDED : நவ 01, 2024 04:50 AM

உச்சிபுளி: டூவீலரில் சென்ற போது தவறவிட்ட 5 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ஐயப்பன் நேர்மையை மக்கள் பாராட்டினர். ராமநாதபுரம் அருகே உச்சிபுளியை சேர்ந்தவர் பழனிக்குமார். நேற்று முன்தினம் மனைவியுடன் டூவீலரில் தீபாவளி பொருட்கள் வாங்க சென்ற போது கையில் வைத்திருந்த பையை தவற விட்டார்.
அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் ஐயப்பன் பையை எடுத்து பத்திரமாக உச்சிப்புளி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். பையில் 5 பவுன் நகை இருந்த நிலையில் பதட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க பழனிக்குமார் வந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் ஐயப்பன் ஒப்படைத்த பை பழனிக்குமாருடையது என்பது உறுதியானது. இதையடுத்து அவரிடம் நகையுடன் பை ஒப்படைக்கப்பட்டது.5 பவுன் நகைக்கு ஆசைப்படாமல் போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ஐயப்பனின் நேர்மை மற்றும் துரிதமாக செயல்பட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

