/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு
/
கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு
கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு
கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 05, 2024 05:50 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் கனவு ஆசிரியர் விருது பெற்ற 5 ஆசிரியர்களை கலெக்டர் விஷ்ணுசந்திரன் பாராட்டினார்.
தமிழகத்தில் 379 ஆசிரியர்களுக்கு அவர்களின் பாடப்பொருள் சார் அறிவு, வகுப்பறையில் புதுமையான அணுகுமுறைகள், நவீன தகவல் தொழில் நுட்ப தொடர்பு, தொழில் நுட்பத்தை கற்பித்தலுக்குப் பயன்படுத்துதல் அடிப்படையில் கனவு ஆசிரியர் -2023 விருது வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி சா.வில்சி கிரேஸ், ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தீ.மாசின் பர்வீன், கரைமேல் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆ.ஜெனிபா, முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி க.ஆனந்தி, கீழச்செல்வனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பிராங்ளின் ரிச்சர்டு ஆகியோர் கனவு ஆசிரியர் பதக்கம் , பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இவர்கள் கலெக்டர் விஷ்ணு சந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.