நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமம் தேவரேந்தலில் உள்ள சுயம்பு குழந்தை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலில் காசி விஸ்வநாதர், பாலவிநாயகர், பாலமுருகன் அருள்பாலிக்கின்றனர். மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி நடந்தது.
பின்னர் புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடந்தது. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.