/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எமனேஸ்வரம் உய்யவந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
/
எமனேஸ்வரம் உய்யவந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 22, 2024 11:16 PM
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் உய்யவந்தாள் அம்மன், கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
பிப்.19 காலை 9:15 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.காலை, மாலை என பிப்.21 வரை 5 கால யாக பூஜைகள், பூர்ணாகுதி நடந்தன. நேற்று காலை 8:00 மணிக்கு கோபூஜை நடந்தது. 6ம் கால யாக பூஜைகள் துவங்கி நவ குண்ட அக்னி வழிபாடு, மகாபூர்ணாகுதி நடத்தப்பட்டது.
பின்னர் மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலையில் இருந்து புனித தீர்த்த குடங்கள் மங்கள வாத்தியம் முழங்க புறப்பாடாகியது. அப்போது மூல விமானம் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் காலை 11:10 மணிக்கு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து 11:30 மணிக்கு உய்யவந்தாள், கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தன. மேலும் சிறப்பு தீபாராதனைகள், அன்னதானம் நடந்தது.
ஏற்பாடுகளை ஆண்டிப்பண்டாரத்தார் சமூக நலச் சங்கம் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.