ADDED : ஜூன் 06, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருநாழி: பெருநாழி அருகே காடமங்கலத்தில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
ஜூன் 4ல் முதல் கால யாக சாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்றுமுன்தினம் 2ம் கால யாகசாலை, பூர்ணாஹூதி, வாஸ்து சாந்தி, வேதப் பாராயணம் உள்ளிட்டவைகளும் நடந்தது.
நேற்று காலை 10:15 மணிக்கு காளியம்மன், கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பக்தர்களுக்கு இரண்டு நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காடமங்கலம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.