/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபம் கும்பாபிஷேகம்
/
ராமேஸ்வரத்தில் முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபம் கும்பாபிஷேகம்
ராமேஸ்வரத்தில் முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபம் கும்பாபிஷேகம்
ராமேஸ்வரத்தில் முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபம் கும்பாபிஷேகம்
ADDED : அக் 27, 2025 04:09 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் மணி மண்டபத்திற்கு கும்பாபிஷேகம் விழா நடந்தது.
ராமேஸ்வரம் என்.எஸ்.கே., வீதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, ராமேஸ்வரம் தேவர் உறவின்முறை சங்கத்தினர் புதிய மணி மண்டபம் அமைத்தனர். இந்த மணி மண்டபத்திற்கு நேற்று காலை புரோகிதர்கள் மூலம் யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, மணிமண்டப கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தேவர் சிலைக்கு தீபாராதனை நடத்தப்பட்டு புனிதநீர் மக்கள் மீது தெளிக்கப்பட்டது.
இவ்விழாவில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் ஆப்பநாடு மறவர் முனியசாமிதேவர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சென்னை தொழிலதிபர் வெங்கடராமன், தேவர் அறக்கட்டளை சேர்மன் அரசகுமார், எம்.பி., தர்மர், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முனியசாமி, அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் முருகன், முன்னாள் தமிழக தடையவியல் அறிவியல் துறை இயக்குநர் விஜயகுமார், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி, ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் ராம்குமார், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தேசிய செயலாளர் சுரேஸ், பி.எம்.டி.,தேவர் அறக்கட்டளை தலைவர் இசக்கிராஜா, ராமேஸ்வரம் முன்னாள் நகராட்சி தலைவர் அர்ச்சுனன், அ.தி.மு.க., நகர் செயலாளர் கே.கே. அர்ச்சுனன், அனைத்து சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

