ADDED : பிப் 12, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளம் ஊராட்சியில் உள்ள புதுக்குளம் கிராமத்தில் புதுகுளத்தையா, முனியப்ப சுவாமி, கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
காலை 9:00 மணிக்கு மூலவர்களின் சன்னதியில் உள்ள கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி உத்தரகோசமங்கை பாலசுப்பிரமணியன் குருக்கள், நாகநாதன் குருக்கள் கும்பாபிஷேகம் செய்தனர்.
மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவில் நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.