/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆய்க்குடி நவநீத கிருஷ்ணன் கோயில் கருக்காத்தியில் கும்பாபிஷேகம்
/
ஆய்க்குடி நவநீத கிருஷ்ணன் கோயில் கருக்காத்தியில் கும்பாபிஷேகம்
ஆய்க்குடி நவநீத கிருஷ்ணன் கோயில் கருக்காத்தியில் கும்பாபிஷேகம்
ஆய்க்குடி நவநீத கிருஷ்ணன் கோயில் கருக்காத்தியில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 02, 2025 11:31 PM

சிக்கல்: சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சி ஆய்க்குடி கிராமத்தில் நவநீதகிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.
நேற்று காலை 7:25 மணிக்கு விஸ்வரூபம் சுப்ரபாதம் உள்ளிட்ட விசேஷ ஹோமங்களும், பூர்ணாகுதிக்கு பிறகு கடம் புறப்பாடு நடந்தது. காலை 11:15 மணிக்கு கோபுர விமான கலசத்தில் திருப்புல்லாணி ஜெயராம் பட்டர் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
மூலவர் நவநீத கிருஷ்ணன், கருடன், விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யாதவர் சங்கம் மற்றும் ஆய்க்குடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
உத்தரகோசமங்கை:- உத்தரகோசமங்கை அருகே மேலமடை ஊராட்சி கருக்காத்தி கிராமத்தில் கும்பாபிஷேக விழா நடந்தது.
பூரண புஷ்கலா சமேத மருதாருடைய அய்யனார், கருப்பணசாமி, காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் நேற்று காலை 11:30 மணிக்கு சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை கருக்காத்தி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
* கடலாடி அருகே கே.கருங்குளம் கிராமத்தில் உள்ள யாதவர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை 11:15 மணிக்கு கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கே.கருங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.