/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கும்பாபிேஷகம் துவக்கம்
/
காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கும்பாபிேஷகம் துவக்கம்
காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கும்பாபிேஷகம் துவக்கம்
காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கும்பாபிேஷகம் துவக்கம்
ADDED : மே 26, 2025 09:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பூங்குளம் கிராமம் பூங்குளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை யொட்டி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
அய்யனார், சேதுமாகாளி, சுடலை மாடசாமி, கருப்பணசாமி உட்பட கிராம தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பின்பு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டினர். முகூர்த்தக்கால் நடப்பட்டது.
ஜூன் 3ல் மங்கல இசை, கணபதி ஹோமம் துவங்கி ஜூன் 6ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.முதுகுளத்துார், ஏனாதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர்.