/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணியில் கும்பாபிஷேக விழா
/
திருப்புல்லாணியில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 07, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி வடக்கு தெரு புல்லாணி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவாஜனம் உள்ளிட்ட முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.
அன்றைய தினம் மாலை முளைப்பாரி வலம் வருதல், யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு புல்லாணி அம்மன் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
பின்னர் மூலவருக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.