/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
/
கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
ADDED : ஜூலை 15, 2025 03:32 AM

உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை அருகே வடக்கு மல்லல் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை கடம் புறப்பட்டு கோயில் விமான கலசத்தில் உத்தரகோசமங்கை முத்துக்குமார குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
மூலவர் செல்வ விநாயகருக்கு 11 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வடக்கு மல்லல் தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறையினர், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
*ராமநாதபுரம் கூரிசாத்த அய்யனார் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது. நேற்று காலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீமான் முனியாண்டி, லட்சுமி அம்மாள் அறக்கட்டளையினர் ஏற்பாடுகளை செய்தனர். ஹிந்து கோவில் பூஜாரிகள் பேரவை, ஞான தீப சேவா சங்கம், சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

