/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் கும்பாபிஷேக விழா
/
உத்தரகோசமங்கையில் கும்பாபிஷேக விழா
ADDED : ஏப் 05, 2025 05:51 AM
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத் துறையின் அங்கீகாரம் பெற்ற கோயிலின் ஒப்பந்த கான்ட்ராக்டர் வி.பி. வேல்முருகன் ஸ்தபதி, உத்தரகோசமங்கை முன்னாள் ஊராட்சி தலைவர் என்.எஸ்.உத்தண்ட வேலு, உத்தரகோசமங்கை ஸ்ரீ பெத்தனாட்சி டிரேடர்ஸ் உரிமையாளர் பி.மதன், உத்தரகோசமங்கை களரி வட்டார நாடார்கள் 9ம் மண்டகப்படி உபயதாரர்கள், ராமநாதபுரம் வாசுதேவன் பாத்திரக்கடை உரிமையாளர் ஜோதிமணி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளை சார்பில் களரி வேல்முருகன் கோயிலில் காலை 10:00 முதல் மதியம் வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் கோயில் குருசாமி மோகன் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் கோயிலை சுற்றி தேங்கி இருந்த குப்பையை உடனுக்குடன் துாய்மைப் பணியாளர்கள் மற்றும் டிராக்டர் மூலம் அகற்றப்பட்டது.
நகரின் பல்வேறு இடங்களில் பக்தர்களின் வசதிக்காக அதிகளவில் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

