ADDED : பிப் 16, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே மேலாய்க்குடி ஊராட்சி திருச்சண்முகநாதபுரம் கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோயிலில் கால பைரவர் மற்றும் வராகி அம்மனுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவையொட்டி விநாயகர் வழிபாடுகளுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.
நேற்று காலை ஹோமங்கள் நிறைவடைந்து பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து புனித தீர்த்த குடங்கள் கோயிலை வலம் வந்து கால பைரவர்,வராகி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.