ADDED : செப் 11, 2025 10:38 PM

திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே சின்னாண்டி வலசை ஊராட்சி சங்கன்வலசை செட்டித்தோட்டம் நொண்டி முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்., 10ல் அனுக்ஞை, விநாயகர் பூஜை, நவகிரக ஹோமத்துடன் முதல் காலை யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை சூரிய பூஜை, கோ பூஜை உள்ளிட்ட இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பின் காலை 10:30 மணிக்கு நொண்டி முனீஸ்வரர் கோயில் கோபுர விமான கலசத்தில் பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
மூலவர் நொண்டி முனீஸ்வரருக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் குப்புசாமி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
* திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி காக்கையன் வலசையில் விழா நடந்தது.
யாக வேள்வி பூஜைக்கு பின் கற்பக விநாயகர், முத்து மாரியம்மன், முனீஸ்வரர், கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் காலை 10:00 மணிக்கு சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காக்கையன் வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.