ADDED : பிப் 01, 2025 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவையில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஜன., 29ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. மூலவர்கள் காமாட்சியம்மன், சேதுமா காளியம்மன், பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.