ADDED : மே 05, 2025 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : கீழக்கரை அருகே கும்பிடு மதுரை கிராமத்தில் உள்ள தர்ம முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கடந்த மே 3 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று யாகவேள்விக்கு பிறகு காலை 10:00 மணிக்கு கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர் தர்ம முனீஸ்வரருக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.