நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் முத்தப்பு தவசியப்பு, பகவதி பரஞ்ஜோதி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று மூன்றாம், நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார் சக்தி குருக்கள் தலைமையில் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. பின் முத்தப்பு தவசியப்பு உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.