நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே சம்பகுளம் கிராமத்தில் பூர்ணபுஷ்ப கலா அம்பிகா அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை, முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி தீபாரதனை நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. பிறகு காலை 9.30 மணிக்கு மேல் சிவாச்சாரியார் பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் கும்பநீர் ஊற்றப்பட்டது.
பின் அய்யனாருக்கு பால், சந்தனம், மஞ்சள் திரவிய பொடி உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

