ADDED : ஜன 24, 2026 06:26 AM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் இருக்கன்குடி மாரியம்மன், பாலகணபதி, பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை, முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பிறகு காலை 9:30 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கோபுர கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.
பின் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
