UPDATED : மே 19, 2026 03:14 PM
ADDED : மே 19, 2026 02:50 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரை சொக்கநாதர் கோயில் தெருவில் உள்ள தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு மே 18 முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. மே 19 காலை தர்ம முனிஸ்வரர், முத்து கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகமுடையார் முன்னேற்ற சங்கம் மற்றும் கீழக்கரை சொக்கநாதர் கோயில் தெரு விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
