ADDED : செப் 19, 2026 03:21 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்தியார்கோட்டை சாத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து முதல் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கு புனித நீரில் அபிஷேகம் நடந்தது. தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது.
