ADDED : நவ 11, 2026 04:35 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மணலுார் கிராமத்தில் மீனாட்சி அம்பிகா சமேதாய அகஸ்தீஸ்வரர் கோயில் புரைமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இதனை முன்னிட்டு நான்கு கால யாகபூஜைகளுடன் நேற்று நவநீத சிவாச்சாரியார் தலைமையில் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. பின் அகஸ்தீஸ்வரர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு, அபிஷேகம், அலங்கரத்தில் தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
