/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
l ஏர்வாடி தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் வசூல் யாத்ரீகர்கள் அவதி : விழாக்காலங்களில் பத்து மடங்கு கட்டணம் உயர்வு

ADDED : மே 03, 2024 05:11 AM
ஏர்வாடியில் பாதுஷா நாயகம் தர்கா பிரசித்தி பெற்ற புனித ஸ்தலம் இங்கு நாள்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து வருகின்றனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் இங்குள்ள தனியார் லாட்ஜ்களில் ரூம் எடுத்து தங்கி பிரார்த்தனை செய்து பிறகு திரும்புகின்றனர்.
மற்ற இதர நாட்களில் சாதாரண வாடகையாக இருக்கக்கூடிய அறைகள் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு 10 மடங்கு உயர்வதால் யாத்ரீகர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். ஏர்வாடியில் நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் லாட்ஜ்க்கள் உள்ளன.
அவற்றில் ஏசி ரூம்கள் மற்றும் சாதாரண ரூம்கள் நாள் மற்றும் மாத வாடகைக்கு விடப்படுகின்றனர். திருவிழா காலங்களில் கூடுதல் வசூல் செய்யும் போக்கால் யாத்ரீகர்கள் அவதி அடைந்துள்ளனர்.
யாத்திரீகர் கூறியதாவது:
ஏர்வாடியில் உள்ள தனியார் லாட்ஜ்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். குடும்பத்துடன் தங்கினால் அதிக வாடகைக்கு ரூம் எடுத்து தங்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு தனியார் லாடஜ்களிலும் விலைப்பட்டியல் விபரங்களை வைக்காமல் இஷ்டத்திற்கு நோக்கம் போல் வாடகை சொல்கின்றனர்.
இங்குள்ள லாட்ஜ்களில் பெரும்பாலும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் லீசுக்கு எடுத்து அதிக வாடகையை நிர்ணயம் செய்கின்றனர். இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.
எனவே கீழக்கரை வருவாய்த்துறையினர் அதிக கட்டண வசூலில் ஈடுபடும் லாட்ஜ்களை ஆய்வு செய்து வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.