/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
l முறையான வழிகாட்டுதலின்றி வெற்றிலை சாகுபடி l அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்த வலியுறுத்தல்
/
l முறையான வழிகாட்டுதலின்றி வெற்றிலை சாகுபடி l அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்த வலியுறுத்தல்
l முறையான வழிகாட்டுதலின்றி வெற்றிலை சாகுபடி l அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்த வலியுறுத்தல்
l முறையான வழிகாட்டுதலின்றி வெற்றிலை சாகுபடி l அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்த வலியுறுத்தல்
ADDED : செப் 01, 2025 10:09 PM

தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக வெற்றிலை கொடிக்கால்கள் நடப்பட்டு அவற்றிலிருந்து வெற்றிலைகள் பறிக்கப்பட்டு வாழை நார்களால் பண்டல்களாக கட்டப் படுகின்றன. ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெற்றிலை அனுப்பி வைக்கப்படுகின்றன.
மன்னார் வளைகுடா கடற்கரையோர கிராமங்களான முத்துப்பேட்டை, பெரியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முறையான வழிகாட்டுதல் இல்லாமலும் அரசின் மானிய விபரங்கள் குறித்த நடைமுறை தெரியாததும் வெற்றிலை சாகுபடி நலிவடைய காரணமாக உள்ளன.
முத்துபேட்டை வெற்றிலை விவசாயிகள் கூறியதாவது:
கடற்கரையை ஒட்டியுள்ள தென்னந்தோப்பு களில் ஊடுபயிராக வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு அடி இடைவெளி நெருக்கத்தில் வளர்க்கப்படும் அகத்திக்கீரை மரங்களுக்கு நடுவே கயிறுகள் மூலமாக பிணைப்பு ஏற்படுத்தப் படுகிறது. அவற்றில் வெற்றிலைகள் வளர்ந்து பலன் தருகின்றன. நல்ல தண்ணீர் மட்டுமே இவற்றிற்கு பாய்ச்சப்பட வேண்டும்.
இயற்கை உரங்கள் பயன்படுத்த வேண்டும். கூலி ஆட்கள் சம்பளம் மற்றும் பயிர் மேலாண்மை, பராமரிப்பு இவற்றிற்கான தொகை உயர்வால் முன்பு போல் இவற்றில் விவ சாயம் செய்வதில் லாபமின்றி நஷ்டமாகவே உள்ளது. இதனால் பெரிய பட்டினம் மற்றும் முத்துப் பேட்டை பகுதிகளில் வெற்றிலை விவசாயம் பெருமளவு குறைந்து வருகிறது.
திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வு களிலும் வெற்றிலையின் பங்கு அவசிய தேவையாக உள்ளது. கிலோ வெற்றிலை ரூ. 350 முதல் 400 வரை விற்கப்படுகிறது.
எனவே வேளாண் துறையினர் அரிதாக வளர்க்கப்படும் இது போன்ற வெற்றிலை விவசாயத்திற்கு மானியங்களை வழங்கியும், இடுபொருட்கள் மற்றும் வேளாண் ஆலோசனைகளை வழங்கினால் முன்பு போல் வெற்றிலை சாகுபடி செய்வதற்கு வசதியாக இருக்கும், என்றனர்.