/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
l நெடுஞ்சாலையில் எரியாத மின் விளக்குகளால் l வாகன ஓட்டிகள், கால்நடைகளுக்கும் ஆபத்து

ADDED : மார் 14, 2024 10:37 PM

ராமநாதபுரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.30 கோடியில் இருவழிச் சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் நகராட்சி, பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் 7 கி.மீ.,க்கு ரோட்டின் நடுவே ரூ.1 கோடியே 80 லட்சத்தில் சென்டர் மீடியன் நடுவே மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர் பராமரிப்பின்றி பல மாதங்களாக எரியாமல்மின் விளக்குகள் காட்சிப்பொருளாக உள்ளன. ரோடு குண்டும் குழியுமானதால் இரவு நேரத்தில் இருட்டில் கால்நடைகள், நாய்கள் மீது வாகனங்கள் மோதி சிறிய விபத்துக்கள் நடக்கின்றன.
எனவே மின் விளக்குகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். ராமாதபுரம் -ராமேஸ்வரம் ரோட்டில்செல்லும் அதிகாரிகள் ஏனோ இதைப்பற்றி கண்டும் காணாதது போல உள்ளனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மக்களின் உயிர் பிரச்னை என்பதால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக பழுதான மின் விளக்குகளை மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.