/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடையில் சிக்கும் வாகன ஓட்டிகள்

UPDATED : செப் 22, 2024 07:07 AM
ADDED : செப் 22, 2024 05:40 AM

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்கள், அமாவாசை, திருவிழா காலங்களில் அதிகளவில்வாகனங்களில் வருகின்றனர்.
உச்சிபுளி அருகே பெருங்குளத்தில் டோல்கேட் மையம் அமைக்கப்பட்டது. இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெருங்குளம் அருகே பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த டோல்கேட் அகற்றப்பட்டுள்ளது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள உயரமான நான்கு வேகத்தடைகள் இதுவரை அகற்றப்படவில்லை. மேலும் மின்விளக்குகள் பயன்பாடில்லாமல் உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரத்திற்கு வாகனங்களில் வேகமாக செல்லும்போது இரவு நேரத்தில் வேகத்தடைகளை தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே உயிர்பலி ஏற்படும் முன் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும். அல்லது எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.