/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
l கிராமங்களில் பெயரளவில் வரும் குடிநீர் l கோடை துவங்கும் முன்பே தட்டுப்பாடு
/
l கிராமங்களில் பெயரளவில் வரும் குடிநீர் l கோடை துவங்கும் முன்பே தட்டுப்பாடு
l கிராமங்களில் பெயரளவில் வரும் குடிநீர் l கோடை துவங்கும் முன்பே தட்டுப்பாடு
l கிராமங்களில் பெயரளவில் வரும் குடிநீர் l கோடை துவங்கும் முன்பே தட்டுப்பாடு
ADDED : மார் 05, 2024 04:17 AM

ராமநாதபுரம் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் கடந்த 2009ம் ஆண்டில்,ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ரூ. 616 கோடி மதிப்பில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை நகராட்சிகள், 2306 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஊரக பகுதிகளுக்கு 17.18 லட்சம் லிட்டர், பேரூராட்சக்கு 4 லட்சம் லிட்டர், நகராட்சி பகுதிகளுக்கு 14.82 லட்சம் லிட்டர் அளவிலும் குடிநீர்வினியோகம் செய்யப்படுகிறது.
இதுபோக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் கிராமங்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்த நிலைமையில் கடந்த சிலநாட்களாக திருச்சியிலிருந்து காவிரி கூட்டுகுடிநீர் வழங்கும் அளவு குறைக்கப்பட்டுஉள்ளது. இதன்காரணமாக நகர், கிராமங்களில் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை பெயரளவில் குடிநீர் வீனியோகம் செய்கின்றனர். இதனால் மக்கள் குடிநீருக்காக மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர்.
வசதியுள்ளவர்கள் குடம் ரூ.12க்கு விலைக்கு வாங்குகின்றனர். சில இடங்கள் குழாய் பழுதாகியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இனிவரும் கோடையை சமாளிக்க குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

