/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
l மன்னார் வளைகுடாவில் விளையும் கடல் பாசிகள்... l மீனவ தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்கிறது

ADDED : டிச 01, 2024 07:02 AM

மன்னார் வளைகுடா கடலில் 2 முதல் 3 நாட்டிக்கல் மைல் தொலைவில் தீவுகளுக்கு அருகே கிடைக்கும் பச்சைக் கடல்பாசி (குளோரோ பைட்டா) பழுப்பு கடல் பாசி (பேயோ பைட்டா) சிவப்பு கடல் பாசி (ரோடோ பைட்டா) நீலக்கடல் பாசி (சயனோபைட்டா) ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன.
இவை கட்டக்கோரை, பக்கோடா, சார்கசம் என பெயரிடப்பட்டும் அழைக்கப்படுகிறது. இவை கடலின் தகவமைப்பிற்கு முக்கிய பங்களிக்கின்றன.
கடல் பாசிகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாக பயன்படுகின்றன. மேலும் பல்வேறு பயன்பாடுகளுக்காக கடல்பாசி சேகரிக்கப்படுகின்றன. பெரியபட்டினம் மற்றும் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் பாரம்பரியமாக கடல் பாசி சேகரிக்கும் தொழில் நடக்கிறது.
நாட்டுப் படகுகளில் செல்லும் மீனவ கூலித் தொழிலாளர்கள் கடல் பாறையின் மேற்பகுதியில் வளரும் கடல் பாசிகளை கைகளால் சேகரிக்கின்றனர். அவற்றை கரைக்கு கொண்டு வந்து உலர்த்துகின்றனர்.
கடல் பாசி சேகரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:
ஈரப்பதத்துடன் உள்ள ஒரு கிலோ கடல் பாசி ரூ.5க்கும், அவற்றை உரிய முறையில் காய வைத்து உலர்த்தப்பட்ட கடல் பாசி கிலோ ரூ.17 க்கும் தொழிற்சாலைகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். காய வைக்கப்பட்ட கடல்பாசி மூன்றில் ஒரு பங்காக வற்றி விடுகிறது.
இவற்றை உரத் தொழிற்சாலை, மருத்துவ பயன்பாடு, துணிகளுக்கு சாயமேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக உரிய முறையில் அரைத்து துாளாக்கி தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் கடல்பாசி திகழ்கிறது என்றனர்.