/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்
/
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்
ADDED : ஜன 30, 2024 12:18 AM
கீழக்கரை, -கீழக்கரை செய்யது ஹமீதா கலை - அறிவியல் கல்லுாரியில் மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில் குறை தீர்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். வருங்கால வைப்பு நிதி மண்டல அமலாக்க அலுவலர் சுனில் குமார், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் நித்யா, மேலாளர் செல்வம் ஆகியோர் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தனர். அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.
ஒவ்வொரு மாதமும் 27ம் தேதி அல்லது அதற்கு அடுத்த அலுவலக வேலை நாளில் குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.