/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிணற்றில் விழுந்த கூலி தொழிலாளி மீட்பு
/
கிணற்றில் விழுந்த கூலி தொழிலாளி மீட்பு
ADDED : ஆக 21, 2025 11:10 PM
கீழக்கரை: கீழக்கரை ஹிந்து பஜார் கோயில் அருகே உள்ள கிணற்றில் பாதுகாப்பு கருதி கதவு போன்ற அமைப்பில் மூடி இடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு கிணற்றின் மேற்புறத்தில் கீழக்கரை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முனியசாமி 45, அமர்ந்திருந்தார். இந்நிலையில் எதிர்பாராமல் தவறி 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தார்.
கிணற்றில் விழுந்ததை அறிந்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஏர்வாடி தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி தண்ணீருக்குள் நீந்தி கொண்டிருந்த கூலித் தொழிலாளி முனியசாமியை மீட்டனர்.
மது போதையில் விழுந்தாரா அல்லது எதிர்பாராமல் விழுந்தாரா என்பது குறித்து கீழக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.