/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வி.ஏ.ஓ.,க்களுக்கு பணிச்சுமை அடங்கல் வழங்குவதில் தொய்வு
/
வி.ஏ.ஓ.,க்களுக்கு பணிச்சுமை அடங்கல் வழங்குவதில் தொய்வு
வி.ஏ.ஓ.,க்களுக்கு பணிச்சுமை அடங்கல் வழங்குவதில் தொய்வு
வி.ஏ.ஓ.,க்களுக்கு பணிச்சுமை அடங்கல் வழங்குவதில் தொய்வு
ADDED : நவ 04, 2025 10:17 PM
திருவாடானை: வி.ஏ.ஓ.,க்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வழங்கப்பட்டதால் அடங்கல் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் 26,650 எக்டேரில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீடு வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காப்பீடு செய்ய நவ.,15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் ஆர்வமாக பதிவு செய்யத் துவங்கியதால் சில குரூப்களில் மூவிதழ் அடங்கல் தீர்ந்து விட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு சில வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆதியூர், ஆக்களுர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குரூப்களில் நிரந்தர வி.ஏ.ஓ.,க்கள் இல்லாததால் கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றுகின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு உடனுக்குடன் அடங்கல் வழங்க முடியாமல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வி.ஏ.ஓ.,க்களுக்கு கூடுதலாக பி.எல்.ஓ., பணி, மூவிதழ் அடங்கல் பற்றாக்குறை, 2 அல்லது 3 குரூப்களுக்கு ஒரு வி.ஏ.ஓ.,பணி என பல்வேறு விதங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அடங்கல் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிருப்தி யடைந்துள்ளனர்.

