ADDED : அக் 27, 2024 03:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி, : கமுதி அருகே கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரியில் தேவர் 117வது ஜெயந்தி விழா 62-வது குருபூஜை விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது.
முதல்வர் தர்மர் தலைமை வகித்தார். கல்லுாரி மாணவிகள் விளக்கு பூஜையில் பங்கேற்றனர். முத்துராமலிங்கத்தேவர் படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர். பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.