ADDED : ஜன 27, 2024 06:40 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார் : -முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயிலில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடந்தது. மூலவரான செல்லி அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், பன்னீர், திரவியப் பொடி உட்பட 21 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
செல்லி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் சாந்தா தலைமையில் 108 விளக்கு பூஜை நடந்தது. இதில் முதுகுளத்துார், துாரி, செல்வநாயகபுரம் அதனை சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
