ADDED : ஏப் 15, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்தியார்கோட்டை சாத்தாயி அம்மன் கோயில் விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில், உலக அமைதி வேண்டியும், செல்வ வளம் வேண்டியும் விளக்கேற்றி பெண்கள் பிரார்த்தனை செய்தனர். அதைத் தொடர்ந்து மூலவருக்கு நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
