/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை மகா மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
/
கீழக்கரை மகா மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED : ஆக 11, 2025 10:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : கீழக்கரை மறவர் தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் 63ம் ஆண்டு ஆடி உற்ஸவ விழா நடந்தது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
நேற்று முன்தினம் மாலை மூலவர் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது.
பூஜையில் குங்கும அர்ச்சனை, பஜனை நாமாவளி, மாங்கல்ய பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. பெண்களுக்கு தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.