UPDATED : மே 24, 2026 11:25 PM
ADDED : மே 24, 2026 11:23 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கோட்டை முனீஸ்வரர், கருப்பண சுவாமி, காளியம்மன் கோயில் விழா, மே 21 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
அன்று முதல் மூலவர்களுக்கு தினமும் பல்வேறு அபிஷேக பூஜைகள் நடந்தன. மே 23 மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. உலக அமைதி வேண்டி பெண்கள் பிரார்த்தனை செய்தனர். முக்கிய விழாவான பூக்குழி விழா, மே 29ல் நடக்கிறது, ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்கின்றனர்.
